Friday, 10 January 2014

மதீனாவிற்கு வந்தபோது இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த முதல் செயல் எது ?


இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அவர்கள் செய்த முதல் செயல் ஒரு மஸ்ஜிதை கட்டியது ஆகும்.

அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் 
மஸ்ஜித்கள் (பள்ளிவாசல்கள்) . என்பவை இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத் தலங்கள் ஆகும். ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்குவதற்கும், அவனது தூதர் வழிகாட்டிய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கும் இவை கட்டப்படுகின்றன.முஸ்லிம்கள் ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்ற இங்கு கூடுவார்கள்.இன்னும் அவன் நினைவு கூரப்படுகிறான். அவனுக்காகவே மக்கள் அவனுடைய அருளை எதிர்பார்த்து ஒன்று கூடுகிறார்கள். தொழுகிறார்கள். மார்க்க உபதேசங்களை செவிமடுக்கிறார்கள். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பள்ளிவாசல்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதுவெல்லாம் சராசரி முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கும் அடிப்படையான விஷயங்கள்தாம். 

ஆனால், இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களாலும் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று, நம் காலத்தின் மஸ்ஜித்கள் (பள்ளிவாசல்கள்) பராமரிக்கப்படுகின்றனவா ? 

என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் எழ வேண்டும் !

வெறும் வணக்க வழிபாடுகளோடு மட்டும் சுருங்கிக் கிடக்கவில்லை மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல்.”

கல்விக் கூடமாக, பண்புப் பயிற்சியின் பட்டறையாக, ஏழைகளின் தங்குமிடமாக, அநாதைகளுக்கு அடைக்கலமாக, ஆதரவற்றோர்க்கு ஆதரவாக, கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக, நீதிமன்றமாக, ஆலோசனை அரங்கமாக, நாடாளுமன்றமாக, மருத்துவமனையாக, வழிப்போக்கர்களின் கூடாரமாக, முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக, மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக, ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக,போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக, விளையாட்டுத் திடலாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக, பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் மின்னியது இறுதிநபி முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின்         மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல்.”

இறுதி நபியின் அழகிய சுன்னத்

இறுதி நபியின் அழகிய சுன்னத்தான மஸ்ஜித் (பள்ளிவாசல்) கட்டுவது ,இன்னும் பராமரிப்பது போன்ற நற்காரியங்களில் ஈடுபட அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வங்களை பயன்படுத்தி இம்மை மறுமையின் பயன்களை பெற்றுக்கொள்ள அல்லாஹ் கிருபை (தவ்ஃபீக்) செய்வானாக.

பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்தக்கூடாது

குறிப்பு : பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்திப் பேசுவது பாரிய குற்றம் என்பதும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இச்செயலை கண்டித்துள்ளார்கள் என்பதும் குறித்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளிவாசலில் உயர்ந்த சத்தத்தில் கதைத்துக்கொண்டிருப்பதை நாம் கட்டாயம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

அறிவு சார்ந்த விடயங்கள், பயான் நிகழ்ச்சிகள், குத்பா பிரசங்கங்கள், அவசியமான விடயங்கள் போன்றவற்றில் சத்தங்களை உயர்த்துவதில் தடையில்லை என்பதையும் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் உட்பட பல அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். மாறாக, அவசியமற்ற வீணான பயனற்ற விடயங்களிலேயே சத்தங்களை உயர்த்திப் பேசக்கூடாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.








No comments:

Post a Comment